தமிழ் ஆரவாரி யின் அர்த்தம்

ஆரவாரி

வினைச்சொல்ஆரவாரிக்க, ஆரவாரித்து

  • 1

    (அலை) பெரும் ஓசையிடுதல்.

    உரு வழக்கு ‘நெஞ்சில் நினைவலைகள் ஆரவாரித்தன’

  • 2

    உற்சாகத்துடன் பெரும் சத்தம் எழுப்புதல்; ஆரவாரம்செய்தல்.

    ‘கடைசிப் பந்தில் கடைசி ஆட்டக்காரர் ஆட்டம் இழந்ததும் ரசிகர்கள் ஆரவாரித்தார்கள்’