தமிழ் ஆராய் யின் அர்த்தம்

ஆராய்

வினைச்சொல்ஆராய, ஆராய்ந்து

 • 1

  (பின்னணித் தகவல்களை அறிவதற்காக) விசாரித்தல்; (உண்மையை அறிவதற்காக) பரிசீலித்தல்.

  ‘அதிகாரியின் மேல் சாட்டப்பட்ட குற்றங்களை ஆராய்ந்து வருகிறார்கள்’

 • 2

  புதிய உண்மைகளையும் அடிப்படைகளையும் கண்டறிவதற்காக அலசிப்பார்த்தல்.

  ‘ஓர் எழுத்தாளரின் நடையைப் பகுத்து ஆராய்ந்தால் அவருடைய தனித் தன்மைகளை அறியலாம்’
  ‘இரண்டாம் உலக யுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்களை இந்த நூல் ஆராய்கிறது’

 • 3

  ஒன்றைச் செய்வதால் ஏற்படும் நன்மைதீமைகளை எண்ணிப் பார்த்தல்; யோசித்தல்.

  ‘நான் சொன்னதை நிதானமாக ஆராய்ந்துபார்’
  ‘நீ சிறிதும் ஆராயாமல் அவசரப்பட்டு இதைச் செய்துவிட்டாய்’