தமிழ் ஆரோக்கியம் யின் அர்த்தம்

ஆரோக்கியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  நோய் இல்லாமல் உடலும் மனமும் சுகமாகவும் சீரான தன்மையிலும் இருக்கும் நிலை; நலம்.

  ‘தினமும் கீரையைச் சாப்பாட்டில் சேர்த்துவந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்’

 • 2

  (தனிமனிதன், சமூகம்) வளர்ச்சி அடைவதற்கான நிலைமை.

  ‘ஆரோக்கியமான சூழலில் இலக்கியம் வளர்கிறது’
  ‘மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்வதற்குத் தேவையான ஆரோக்கியமான சூழல் தற்போது இல்லை’

 • 3

  (உறவுகளைக் குறிக்கும்போது) சிக்கல்கள் இல்லாத தன்மை.

  ‘பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஆரோக்கியமான உறவைக் காண முடிவதில்லை’
  ‘நட்பு என்பது ஆரோக்கியமாக இருக்க வேண்டும்’