தமிழ் ஆறுதல் யின் அர்த்தம்

ஆறுதல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (வருத்தத்திலிருந்தும் ஏமாற்றத்திலிருந்தும் மனம் மீள) தெம்பு தருவது; தேறுதல்.

  ‘வீட்டில் பலருடைய ஏளனப் பேச்சுக்கிடையில் அம்மா காட்டிய பரிவுதான் பெரும் ஆறுதலாக இருந்தது’
  ‘ஆறுதலாகப் பேச யாரும் பக்கத்தில் இல்லை’
  ‘அவருடைய ஆறுதலான வார்த்தைகள் என்னை நெகிழவைத்தன’

தமிழ் ஆறுதல் யின் அர்த்தம்

ஆறுதல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (செயல்படுவதில்) நிதானம்.

  ‘என்ன அவசரம், கோயிலுக்கு ஆறுதலாகப் போவோமே’
  ‘உன்னுடைய ஆறுதலான போக்கு வியாபாரத்துக்குச் சரிவராது’