தமிழ் ஆலவட்டம் சுற்று யின் அர்த்தம்

ஆலவட்டம் சுற்று

வினைச்சொல்சுற்ற, சுற்றி

  • 1

    (தன் காரியத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒருவரின் பின்னால்) சுற்றித் திரிதல்.

    ‘முகஸ்துதி பாடுவது, ஆலவட்டம் சுற்றுவது இவையெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது’
    ‘அவனுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொன்னதற்காக அவரை இப்படி ஆலவட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறான்’