தமிழ் ஆலோசனை யின் அர்த்தம்

ஆலோசனை

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவர் தன் கருத்தை மற்றொருவருக்குத் தெரிவிப்பதன்மூலம் காட்டும் வழிமுறை; ஒருவர் மற்றொருவரிடம் கலந்து பெறும் கருத்துரை.

  ‘இந்த நூலின் கையெழுத்துப் பிரதியைப் படித்துப்பார்த்துவிட்டு நண்பர்கள் ஆலோசனைகள் வழங்கினார்கள்’
  ‘கட்சித் தலைவரின் ஆலோசனையைக் கேட்ட பிறகே போராட்டத் திட்டம் வகுக்கப்பட்டது’

 • 2

  ஒரு துறையில் தேர்ச்சி பெற்றவர் வழங்கும் முறையான கருத்து.

  ‘நம்முடைய காப்புரிமைப் பிரச்சினைகுறித்து வழக்கறிஞரின் ஆலோசனை என்ன?’