தமிழ் ஆலோசி யின் அர்த்தம்

ஆலோசி

வினைச்சொல்ஆலோசிக்க, ஆலோசித்து

 • 1

  (ஒன்றை எவ்வாறு செய்யலாம் என்பதைப் பற்றி மற்றொருவருடன்) கலந்து பேசுதல்.

  ‘தங்கையின் திருமண விஷயமாகத் தந்தையுடன் ஆலோசித்த பிறகு எழுதுகிறேன்’
  ‘தலைவருடன் ஆலோசித்துவிட்டுத்தான் இந்த முடிவு எடுத்திருக்கிறோம்’

 • 2

  யோசித்தல்; சிந்தித்தல்.

  ‘இந்தக் கேள்விக்கு ஆலோசித்துத்தான் பதில் சொல்ல முடியும்’