தமிழ் ஆள் யின் அர்த்தம்

ஆள்

வினைச்சொல்ஆள, ஆண்டு

 • 1

  ஆட்சிசெய்தல்.

  ‘ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்டுவந்தபோது நடந்த சம்பவம் இது’

 • 2

  மேலாதிக்கம் செலுத்துதல்.

  ‘ஆண்கள் ஆளப் பிறந்தவர்கள், பெண்கள் அடங்கப் பிறந்தவர்களா?’
  ‘உலகையே ஆள முனையும் பன்னாட்டு நிறுவனங்கள்’

 • 3

  உயர் வழக்கு (சொல் முதலியவற்றை) பயன்படுத்துதல்.

  ‘‘துப்பு’ என்ற சொல்லை வள்ளுவர் பல பொருளில் ஆண்டிருக்கிறார்’
  ‘எல்லா நேரத்திலும் ஆளக்கூடிய ராகம் இது’

 • 4

  (சொத்து, செல்வம், சுகம் முதலானவற்றை) அனுபவித்தல்.

  ‘வேண்டிய செல்வம் இருந்தாலும் அதை ஆள்வதற்குக் கொடுத்துவைக்க வேண்டும்’

தமிழ் ஆள் யின் அர்த்தம்

ஆள்

பெயர்ச்சொல்

 • 1

  வயதுவந்த ஆண்.

  ‘வாட்டசாட்டமான ஆள்’
  ‘ஆளை மயக்கும் அவளுடைய அழகு’

 • 2

  (ஆண் அல்லது பெண் என்னும் வேறுபாடு இல்லாத சூழ்நிலையில்) நபர்.

  ‘வீட்டு வேலைக்கு ஓர் ஆள் வைத்திருக்கிறோம்’
  ‘இந்த வீட்டில் நான் பட்டினி கிடந்தாலும் ஏன் என்று கேட்க ஆள் கிடையாது’
  ‘ரயில் விபத்தில் ஆள் சேதம் அதிகம்’

 • 3

  (ஏதேனும் ஓர் அளவுக்காகக் கூறும்போது) சராசரி நபர்.

  ‘ஆள் உயர மாலை’
  ‘ஓர் ஆள் அளவு ஆழம்’

 • 4

  (கூலிக்கு அல்லது சம்பளத்துக்கு) வேலை செய்யும் நபர்.

  ‘ஆள் வைத்துதான் குப்பையை அள்ளிப்போட வேண்டும்’
  ‘நாளைய நடவுக்குப் பத்து ஆள் தேவைப்படும்’

 • 5

  (‘ஆளுக்கு’ என்னும் வடிவம் மட்டும்) ஒருவருக்கு; தலைக்கு.

  ‘வேலையாட்கள் ஆளுக்குப் பத்து செங்கல் எடுத்துக்கொண்டார்கள்’