தமிழ் ஆளாக்கு யின் அர்த்தம்

ஆளாக்கு

வினைச்சொல்ஆளாக்க, ஆளாக்கி

 • 1

  (கோபம், வருத்தம், துயரம் போன்ற விரும்பத் தகாத நிலைகளுக்கு ஒருவரை) உள்ளாக்குதல்; உட்படுத்துதல்.

  ‘நாட்டின் நிலை அவரைத் துன்பத்திற்கு ஆளாக்கியது’
  ‘அப்பாவை இவ்வளவு வருத்தத்திற்கு ஆளாக்கிவிட்டேனே?’

 • 2

  (ஒருவரை) ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவருதல்; உருவாக்குதல்.

  ‘அவனை இந்த அளவுக்கு ஆளாக்க அவனுடைய தாய் பட்ட துன்பங்கள் கொஞ்சம் அல்ல’