தமிழ் ஆளுமை யின் அர்த்தம்

ஆளுமை

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு மனிதனின் தனிப்பட்ட குணத் தொகுப்பு.

  ‘முரட்டுத்தனமும் ஆளுமையின் வெளிப்பாடுதான்’

 • 2

  அருகிவரும் வழக்கு (சொத்தின் மேல் ஒருவருக்கு இருக்கும்) உரிமை; அதிகாரம்.

  ‘அரசனிடமிருந்து நில ஆளுமை சிறு ஜமீன்களுக்குச் சென்றது’

 • 3

  மேலோங்கிய நிலை.

  ‘இவர் கதைகளில் கலை ஆளுமை நன்றாக வெளிப்படுகிறது’