தமிழ் ஆழ் யின் அர்த்தம்

ஆழ்

வினைச்சொல்ஆழ, ஆழ்ந்து

 • 1

  (மகிழ்ச்சி, துயரம், தூக்கம் முதலியவற்றில் அல்லது தான் செய்யும் பணியில்) மூழ்குதல்; (கற்பனையில்) மெய்மறந்த நிலைக்கு உட்படுதல்.

  ‘மகனை இழந்த நாளிலிருந்து அவர் துயரத்தில் ஆழ்ந்துவிட்டார்’
  ‘யோசனையில் ஆழ்ந்து காணப்பட்டார்’
  ‘கோப்புகளைப் பார்ப்பதில் அவர் ஆழ்ந்திருந்தபோது தொலைபேசி ஒலித்தது’
  ‘புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தவன் கொஞ்சம் நேரத்திற்கெல்லாம் தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான்’

 • 2

  (நீரில் அல்லது இருளில்) மூழ்குதல்.

  ‘அணையை உடைத்துக்கொண்டு வந்த வெள்ளத்தில் பல கிராமங்கள் ஆழ்ந்துபோயின’
  ‘மின்சாரம் தடைபட்டதும் ஊரே இருளில் ஆழ்ந்துவிட்டது’

தமிழ் ஆழ் யின் அர்த்தம்

ஆழ்

பெயரடை

 • 1

  ஆழம் அதிகமான.

  ‘ஆழ் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள்’