தமிழ் ஆவல் யின் அர்த்தம்

ஆவல்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (எதிர்பார்ப்புடன் கூடிய) விருப்பம்.

    ‘அனைவரும் தேர்தல் முடிவுகளை அறிய ஆவலாகக் காத்திருந்தார்கள்’
    ‘இந்த நூலை அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆவல்’
    ‘தனக்குள் எழுந்த ஆவலைக் கட்டுப்படுத்திக்கொண்டான்’