தமிழ் ஆவி யின் அர்த்தம்

ஆவி

பெயர்ச்சொல்

 • 1

  வெப்பத்தின் காரணமாகக் காற்றில் கரைந்திருக்கும் புகை போன்ற நுண்ணிய திவலைகளின் தொகுப்பு.

  ‘ஆவி பறக்கும் காப்பி’
  ‘சூரிய வெப்பத்தால் கடல் நீர் ஆவியாகிறது’
  ‘கொதித்துக்கொண்டிருந்த பாத்திரத்தின் மூடியைத் திறந்ததும் கையில் ஆவி அடித்தது’

 • 2

  உடலில் உயிர் இருப்பதற்கு அடையாளமான மூச்சு.

  ‘நேற்று இரவு பெரியவரின் ஆவி பிரிந்தது’

 • 3

  உருவமற்று இருப்பதாக நம்பப்படும் இறந்தவர்கள்.

  ‘ஆவி உலகத் தொடர்பு’
  ‘மூதாதையர்களின் ஆவியை வணங்கும் வழக்கம் இன்னும் சில சமூகங்களில் காணப்படுகிறது’