தமிழ் இக்கட்டு யின் அர்த்தம்

இக்கட்டு

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    (சமாளிப்பது பெரும் பிரச்சினையாக இருக்கும்) நெருக்கடி; கடினமான பிரச்சினை.

    ‘சித்தப்பாவும் கடன் கேட்கிறார் மாமனாரும் கடன் கேட்கிறார். யாருக்குக் கொடுப்பது என்னும் இக்கட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன்’
    ‘வேடிக்கைப் பேச்சு சில சமயம் எவ்வளவு பெரிய இக்கட்டான நிலைமைக்குக் கொண்டுபோய்விடுகிறது!’
    ‘குடும்பம் இக்கட்டான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது மாமாதான் உதவிசெய்தார்’