இங்ஙனம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இங்ஙனம்1இங்ஙனம்2

இங்ஙனம்1

(இங்ஙனமாக)

வினையடை

 • 1

  இப்படி; இவ்வாறு; இவ்விதம்.

  ‘இங்ஙனம் அவள் பேசிய பிறகு...’
  ‘இங்ஙனமாகப் போருக்கு நாடு ஆயத்தமாயிற்று’

இங்ஙனம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இங்ஙனம்1இங்ஙனம்2

இங்ஙனம்2

இடைச்சொல்

 • 1

  ‘இப்படிக்கு’ என்ற பொருளில் கடிதத்தில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘கடிதத்தில் எல்லா விவரங்களையும் எழுதிவிட்டு ‘இங்ஙனம்’ என்று எழுதிக் கையெழுத்திட்டான்’