இசை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இசை1இசை2இசை3

இசை1

வினைச்சொல்இசைய, இசைந்து, இசைக்க, இசைத்து

 • 1

  உடன்படுதல்; சம்மதித்தல்.

  ‘குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ள அவள் இசையவில்லை’
  ‘கலைவிழாவைத் தொடங்கிவைக்க அமைச்சர் இசைந்தார்’

 • 2

  (மனத்திற்கு) உகந்ததாக இருத்தல்.

  ‘எனக்கு இசைந்த வாழ்க்கை’

 • 3

  (முரண்பாடு இல்லாமல்) பொருத்தமாக இணைதல்.

  ‘ராகமும் தாளமும் ஒன்றோடு ஒன்று இசைந்து இனிமை கூட்டின’

இசை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இசை1இசை2இசை3

இசை2

வினைச்சொல்இசைய, இசைந்து, இசைக்க, இசைத்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (தேவாரம், திருப்பாவை போன்றவற்றை) பாடுதல்.

  ‘எம்பெருமானுக்குத் திருப்பல்லாண்டு இசைத்தார்’

 • 2

  உயர் வழக்கு (ஓர் இசைக் கருவியை) வாசித்தல்.

  ‘அவள் வீணையை இசைத்த விதம் திருத்தமாக அமைந்திருந்தது’

இசை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இசை1இசை2இசை3

இசை3

பெயர்ச்சொல்

 • 1

  முறைப்படுத்திய ஓசைகளை வாயால் பாடும் அல்லது இசைக் கருவியால் இசைக்கும் கலை; சங்கீதம்.

 • 2

  (மரபு இலக்கணத்தில்) இயல், நாடகம் ஆகியவற்றோடு சேர்ந்து தமிழின் மூன்று பிரிவுகளில் ஒன்றாக அமைவது.