தமிழ் இசைவு யின் அர்த்தம்

இசைவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒரு கருத்து, ஆலோசனை முதலியவற்றுக்குத் தரும்) ஒப்புதல்; சம்மதம்.

  ‘பொருளாதார உடன்படிக்கை செய்துகொள்ள இரு நாடுகளும் இசைவு தெரிவித்துள்ளன’
  ‘உங்கள் இசைவு இல்லாமல் நான் இதைச் செய்யமாட்டேன்’

 • 2

  (முரண்பாடு இல்லாத) பொருத்தம்; ஒற்றுமை.

  ‘குடும்பத்தின் சூழ்நிலைக்கு இசைவாகவே அவன் முடிவு எடுத்தான்’
  ‘கவிதையில் பொருளுக்கு இசைவான ஒலிநயம் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு’