தமிழ் இடக்கு யின் அர்த்தம்

இடக்கு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (செய்துகொண்டிருந்த ஒன்றைச் செய்ய மறுக்கும்) முரண்டு; சண்டித்தனம்.

  ‘பள்ளிக்கூடத்துக்குப் போக ஏன் இடக்குபண்ணுகிறான்?’
  ‘ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த ஜட்கா வண்டிக் குதிரை திடீரென்று இடக்குசெய்கிறது’

 • 2

  (பேச்சில்) குதர்க்கம்; ஏறுக்குமாறு.

  ‘‘இடக்காகப் பேசாமல் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்’ என்று அப்பா அதட்டினார்’