தமிழ் இடம்பெயர் யின் அர்த்தம்

இடம்பெயர்

வினைச்சொல்-பெயர, -பெயர்ந்து

 • 1

  (மனிதர்கள்) நெடுங்காலமாக வசித்துவந்த இடத்தை விட்டுப் புதிய இடத்துக்குச் செல்லுதல்; புலம்பெயர்தல்.

  ‘புதிய அணை கட்டும் திட்டத்தால் கிட்டத்தட்ட 10,000 குடும்பங்கள் இடம்பெயர வேண்டியிருக்கும்’
  ‘பிழைப்பு தேடி நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் அதிகம்’
  ‘இடம்பெயர்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்’

 • 2

  (பறவைகள், விலங்குகள்) வலசை போதல்.

  ‘குளிர்காலத்தில் சில வகைப் பறவைகள் ருமேனியாவிலிருந்து இடம்பெயர்ந்து இந்தியா வருகின்றன’

 • 3

  (ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவை) இருந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் செல்லுதல்.

  ‘இடப்பற்றாக்குறை காரணமாகச் சென்னை மத்தியச் சிறை புழலேரிக்கு இடம்பெயர்ந்தது’
  ‘நவீன வசதிகளோடு கட்டப்பட்ட கட்டடத்திற்கு நீதிமன்றம் விரைவில் இடம்பெயரும்’