தமிழ் இடம்பெறு யின் அர்த்தம்

இடம்பெறு

வினைச்சொல்-பெற, -பெற்று

  • 1

    (குழுவில், பட்டியலில், நிகழ்ச்சியில் அல்லது காட்சிக்காக) சேர்க்கப்படுதல்.

    ‘இந்தியக் கலாச்சாரக் குழுவில் தமிழ் நாட்டுக் கலைஞர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்’
    ‘தொலைக்காட்சியில் இடம்பெறும் சில விளம்பரங்கள் பாராட்டும்படியாக உள்ளன’
    ‘இவருடைய ஓவியங்கள் இந்தியாவில் நடைபெற்ற கண்காட்சிகளில் இடம்பெற்றிருக்கின்றன’