இடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இடி1இடி2இடி3இடி4இடி5

இடி1

வினைச்சொல்இடிய, இடிந்து, இடிக்க, இடித்து

 • 1

  (கட்டப்பட்ட அமைப்பு) உடைதல்; தகர்தல்.

  ‘பாலம் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது’
  ‘இவ்வளவு மழை பெய்தும் இந்த மண் சுவர் இடியவில்லை’

 • 2

  மனம் உடைதல்; செயலற்றுப்போதல்.

  ‘எத்தனை நாளைக்கு இப்படி இடிந்துபோய் உட்கார்ந்திருப்பாய்; மனத்தைத் தேற்றிக்கொள்’
  ‘தொழிற்சாலை ஆரம்பிப்பதில் ஒன்றன் பின் ஒன்றாகப் பிரச்சினைகள் வந்தாலும் அவர் மனம் இடிந்துவிடாமல் முனைப்போடு செயல்பட்டார்’

 • 3

  (நெல்லை அரைக்கும்போது அரிசி) உடைதல்.

  ‘நெல்லை அவிக்கும்போது போதுமான வெப்பம் இல்லாவிட்டால் அரைக்கும்போது அரிசி இடிந்துவிடும்’

 • 4

  (குத்தப்படுவதன் மூலம் அரிசி முதலியன) மாவாக ஆதல்.

  ‘அரிசி சரியாக இடியவில்லை’

இடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இடி1இடி2இடி3இடி4இடி5

இடி2

வினைச்சொல்இடிய, இடிந்து, இடிக்க, இடித்து

 • 1

  (கட்டடம், பாலம் முதலியவற்றைத் தேவையான கருவிகளைக் கொண்டு) உடைத்தல்; தகர்த்தல்.

  ‘போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த கடை இடிக்கப்பட்டது’
  ‘பாம்புப் புற்றை இடிக்கக் கடப்பாரை வேண்டுமா?’

 • 2

  (அரிசி, பருப்பு போன்றவற்றை உலக்கையால் குத்தி மாவு) தயாரித்தல்.

  ‘அப்பளத்துக்கு மாவு இடிக்கிறார்கள்’

 • 3

  (ஒன்றை அல்லது ஒருவரைக் கீழே தள்ளுவதுபோல்) மோதுதல்.

  ‘பேருந்து வந்ததும் இடித்துத் தள்ளிக்கொண்டு ஏறினார்கள்’
  ‘அலமாரியைச் சாய்த்துக் கொண்டுவந்தும் கதவில் இடித்துவிட்டது’
  ‘மேஜையின் முனை காலில் இடித்து இரத்தமே வந்துவிட்டது’

 • 4

  (பக்கவாட்டில்) குத்துதல்.

  ‘முழங்கையால் அவன் விலாவில் இடித்து அதிகம் பேச வேண்டாம் என்று குறிப்புக் காட்டினேன்’

இடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இடி1இடி2இடி3இடி4இடி5

இடி3

வினைச்சொல்இடிய, இடிந்து, இடிக்க, இடித்து

 • 1

  (இடி) பேரொலியை எழுப்புதல்.

  ‘இடி இடித்ததில் குழந்தை பயந்துவிட்டது’

இடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இடி1இடி2இடி3இடி4இடி5

இடி4

பெயர்ச்சொல்

 • 1

  (முழங்கை முதலியவற்றால் பக்கவாட்டில் கிடைக்கும்) குத்து; (தலை முதலியவை ஒன்றில் மோதுவதால் கிடைக்கும்) அடி.

  ‘தண்ணீர் பிடிக்கும் இடத்தில் ஒரே அடி, இடி, தள்ளல்!’
  ‘நிமிர்ந்தபோது தலையில் சரியான இடி. வலி தாங்க முடியவில்லை’

இடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இடி1இடி2இடி3இடி4இடி5

இடி5

பெயர்ச்சொல்

 • 1

  மழை பெய்யும்போதோ மழை வருவதற்கு அறிகுறியாகவோ சில சமயம் வானத்தில் கேட்கும் (மின்னலுடன் கூடிய) பேரொலி.

  ‘இரவு முழுவதும் இடியும் மின்னலுமாக இருந்தது’

 • 2

  பேரொலியுடன் பூமியில் இறங்கும் மின்னல்.

  ‘இடி விழுந்து பனைமரம் தீப்பற்றி எரிந்தது’