தமிழ் இடிபடு யின் அர்த்தம்

இடிபடு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (மோதுதல், அதிர்தல் போன்றவற்றால் கட்டடம், பாலம் முதலியவை) தகர்ந்துபோதல் அல்லது சிதைதல்.

  ‘சாலையை விட்டு இறங்கிய பேருந்து வீட்டின் மேல் மோதியதால் சுவர் இடிபட்டுச் சரிந்தது’

 • 2

  (மனிதர்கள், விலங்குகள், பொருள்கள் முதலியன) ஒருவரோடு ஒருவர் அல்லது ஒன்றோடு ஒன்று மோதுதல்.

  ‘கூட்டத்தில் இடிபடாமல் ஒதுங்கி நடந்தான்’

 • 3

  (தானியம்) மாவாக்கப்படுதல்.

  ‘அரிசி நன்றாக இடிபட வேண்டும்’