தமிழ் இடுக்கி யின் அர்த்தம்

இடுக்கி

பெயர்ச்சொல்

  • 1

    உருண்டை வடிவ அல்லது பட்டை வடிவக் கம்பியைச் சம நீளத்தில் வளைத்து அல்லது இரண்டு கம்பிப் பட்டைகளை ஒரு முனையில் இணைத்து ஒரு பொருளை எடுப்பதற்கும் பிடித்துக்கொள்வதற்கும் உருவாக்கப்பட்ட கருவி.

  • 2

    வட்டார வழக்கு (காளையை அல்லது ஆட்டுக் கிடாவைக் காயடிக்க) இரு மரக் கட்டைகளை ஒரு முனையில் சற்று இடைவெளி விட்டு இணைத்துக்கட்டிய அமைப்பு.