தமிழ் இடுப்பு யின் அர்த்தம்

இடுப்பு

பெயர்ச்சொல்

 • 1

  தொப்புளுக்குக் கீழும் அடி வயிற்றுக்கு மேலும் இரு பக்கமும் உள்ள வளைவான பகுதி; அரை; இடை.

  ‘துண்டை இடுப்பில் இறுக்கிக் கட்டினான்’
  ‘குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள்’

 • 2

  இடுப்பில் பொருந்தும் ஆடையின் பகுதி.

  ‘கால்சட்டையின் இடுப்பைப் பிரித்த பின்பும் இறுக்குகிறது’