தமிழ் இடைக்காலம் யின் அர்த்தம்

இடைக்காலம்

பெயர்ச்சொல்

 • 1

  நிரந்தரத் தீர்வு காண்பதற்கு முன் உள்ள நிலை; தற்காலிகம்.

  ‘வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடைக்கால உதவி உடனே கிடைக்க வேண்டும்’

 • 2

  (அரசியல், இலக்கிய வரலாற்றில்) பண்டைக் காலத்துக்கும் தற்காலத்துக்கும் இடைப்பட்ட காலம்.

  ‘இடைக்காலச் சோழர்கள்’
  ‘இடைக்கால இலக்கியம்’