தமிழ் இடைஞ்சல் யின் அர்த்தம்

இடைஞ்சல்

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றின் செயல்பாட்டுக்கு அல்லது இயக்கத்துக்குக் குறுக்கீடாக இருப்பது; தடை.

  ‘உங்கள் எழுத்து வேலைக்கு உங்கள் அரசாங்க வேலை இடைஞ்சலாக இருக்கிறதா?’
  ‘போக்குவரத்துக்கு இடைஞ்சலாகத் தெருவின் ஓரத்தில் கடைகள்’

 • 2

  (ஒன்றைச் செய்வதில் நேரிடும்) தொல்லை; தொந்தரவு.

  ‘ஞாயிற்றுக்கிழமையாவது நிம்மதியாக இருக்கலாம் என்றால் எத்தனை இடைஞ்சல்கள்!’
  ‘ஒலிபெருக்கியிலிருந்து வந்த சத்தம் படிப்புக்கு இடைஞ்சலாக இருந்தது’