தமிழ் இடைநில் யின் அர்த்தம்

இடைநில்

வினைச்சொல்-நிற்க, -நின்று

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (பள்ளி மாணவர்கள்) படிப்பைத் தொடராமல் பாதியிலேயே நிறுத்திக்கொள்ளுதல்.

    ‘குழந்தைத் தொழிலாளர்களில் பலர் பள்ளியில் இடைநின்ற மாணவர்களே’
    ‘வறுமையே பெரும்பாலான மாணவர்கள் இடைநிற்கக் காரணமாகிறது’