தமிழ் இடைமறி யின் அர்த்தம்

இடைமறி

வினைச்சொல்-மறிக்க, -மறித்து

 • 1

  (பேச்சில், செயலில்) குறுக்கிடுதல்.

  ‘இடைமறித்துப் பேசினால் சொல்ல நினைத்தது மறந்துவிடும்’
  ‘‘சாதம் போதும்’ என்று அவர் என்னை இடைமறித்தார்’

 • 2

  வழிமறித்தல்.

  ‘சாலையில் போய்க்கொண்டிருந்தவர்களை இடைமறித்துக் கொள்ளை’
  ‘கோபத்தில் வெளியே கிளம்பிய கணவனை இடைமறித்தாள்’