தமிழ் இடையிடையே யின் அர்த்தம்

இடையிடையே

வினையடை

  • 1

    (ஒரு செயலின் அல்லது நிகழ்ச்சியின்) நடுநடுவே/(ஒரு காலத் தொடர்ச்சியில்) அவ்வப்போது.

    ‘சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடிப்பது எனக்குப் பழக்கமாகிவிட்டது’
    ‘எங்கள் ஆசிரியர் பாடம் நடத்தும்போது இடையிடையே கரும்பலகையில் படம் போடுவார்’
    ‘அந்த இரவு நேரத்தின் அமைதியை இடையிடையே எழுந்த வேட்டுச் சத்தம் குலைத்தது’