தமிழ் இடைவெட்டு யின் அர்த்தம்

இடைவெட்டு

வினைச்சொல்-வெட்ட, -வெட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (பேச்சில்) குறுக்கிடுதல்.

  ‘நான் கதைத்துக்கொண்டிருக்கும்போது இடைவெட்டாதே’

தமிழ் இடைவெட்டு யின் அர்த்தம்

இடைவெட்டு

பெயர்ச்சொல்

 • 1

  (இரண்டு முக்கிய நிகழ்வுகளுக்கு இடையிலான) குறுகிய நேரத்தில் இடம்பெறும் ஒரு நிகழ்வு.

  ‘தியாகராஜரின் கிருதியை இடைவெட்டாக வழங்கிவிட்டுப் பிரதான ராகமான சங்கராபரணத்தை வித்வான் விரிவாக ஆலாபனை செய்ய ஆரம்பித்தார்’
  ‘நிகழ்ச்சியில் இடைவெட்டாக மாணவர்களின் தனிநடிப்பு இடம்பெற்றது’