தமிழ் இடைவெளி யின் அர்த்தம்

இடைவெளி

பெயர்ச்சொல்

 • 1

  (இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையில்) கழிந்துசென்ற காலம்.

  ‘பத்து வருட இடைவெளிக்குப் பிறகு தற்செயலாக நான் அவரைச் சந்திக்க நேர்ந்தது’

 • 2

  (ஒன்று முடிவதற்கும் அது மறுபடியும் தொடங்குவதற்கும்) இடைப்பட்ட காலம் அல்லது நேரம்.

  ‘பாடகர் அடுத்த பாட்டைப் பாடுவதற்கு முன்பு கிடைத்த சில நிமிட இடைவெளியில் நீர் அருந்தினார்’
  ‘எல்லோருக்கும் புரிந்ததா என்று கேட்டுவிட்டு ஒரு நிமிடம் இடைவெளி கொடுத்தார் ஆசிரியர்’

 • 3

  நடுவில் உள்ள இடம்.

  ‘எங்கள் இருவருக்கும் இடையே பத்தடி இடைவெளி இருந்தது’
  ‘இடைவெளி இல்லாமல் கட்டப்பட்ட வீடுகள்’

 • 4

  (காலத்தினால் ஏற்படும்) வேற்றுமை.

  ‘என் தலைமுறைக்கும் என் மகனின் தலைமுறைக்கும் உள்ள இடைவெளியை நினைத்துப்பார்த்தேன்’