தமிழ் இண்டு இடுக்கு யின் அர்த்தம்

இண்டு இடுக்கு

பெயர்ச்சொல்

  • 1

    மிகச் சிறிய இடைவெளி.

    ‘இண்டு இடுக்குகளில் எல்லாம் கையை வைக்காதே. பூச்சி கடித்துத்தொலைக்கப்போகிறது’
    ‘ஒரு இண்டு இடுக்கு விடாமல் தேடிப்பார்த்துவிட்டேன். சாவியைக் காணவில்லை’