இணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இணை1இணை2இணை3இணை4

இணை1

வினைச்சொல்இணைய, இணைந்து, இணைக்க, இணைத்து

 • 1

  (தனித்தனியாக இருப்பவை அல்லது இருப்பவர்) ஒன்றுசேர்தல்.

  ‘தேர்தலில் சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளோடு இணைந்து கூட்டணி அமைக்கின்றன’
  ‘அனைத்துப் பள்ளிகளும் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன’

 • 2

  (ஒன்று மற்றொன்றில்) சேர்தல்; கூடுதல்.

  ‘இந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலையோடு இணைகிறது’
  ‘இந்த ஆற்றில் இணையும் சிற்றாறுகளுள் இதுவும் ஒன்று’
  ‘இந்தியப் பண்பாடு என்பது பல பண்பாட்டுக் கூறுகள் இணைந்த கலவை’

 • 3

  (நிலப்பரப்பில்) தனித்தனிப் பகுதிகள் ஒன்றுடன் ஒன்று சேருதல்.

  ‘வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் எல்லாக் கண்டங்களும் இணைந்து இருந்ததாகக் கூறப்படுகிறது’

இணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இணை1இணை2இணை3இணை4

இணை2

வினைச்சொல்இணைய, இணைந்து, இணைக்க, இணைத்து

 • 1

  (தனித்தனியாக இருப்பவற்றை) ஒன்றுசேர்த்தல்/(நிர்வாகத்திற்காக) ஒன்றுபடுத்துதல்.

  ‘சிறுசிறு கம்பிகளை இணைத்து நீளமான கம்பியாக்கினான்’
  ‘ஐந்து வட்டங்கள் இணைக்கப்பட்டுத் தனி மாவட்டம் உருவாயிற்று’

 • 2

  (ஒன்றை மற்றொன்றோடு) தொடர்புபடுத்துதல்.

  ‘இந்த முறைகேட்டையும் இயக்குநரையும் இணைத்து வதந்திகள் எழுந்தன’

 • 3

  (ஒன்றில்) இடம்பெறச்செய்தல்; சேர்த்தல்.

  ‘பழங்குடியினர் பட்டியலில் நூற்றுக்கு மேற்பட்ட வகுப்பினர் இணைக்கப்பட்டுள்ளனர்’
  ‘கடிதத்தோடு காசோலையை இணைத்திருக்கிறேன்’

இணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இணை1இணை2இணை3இணை4

இணை3

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒப்பிடும்போது தகுதியில், மதிப்பில், செயலில்) ஒத்த நிலை; சமம்; நிகர்.

  ‘இயற்கை அழகில் இந்தத் தீவுக்கு இணையான தீவுகள் ஒருசிலவே’
  ‘தாயன்புக்கு இணையாக எதைக் கூறுவது?’

 • 2

  இரண்டாகச் சேர்ந்து இருப்பது அல்லது இருப்பவர்; ஜோடி.

  ‘தந்திக் கம்பியில் சிட்டுக்குருவிகள் இணைகளாக அமர்ந்திருந்தன’
  ‘மகேஷ் பூபதி, பயஸ் இணை இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றது’

 • 3

  ஜோடியில் ஆண் அல்லது பெண்; துணை.

  ‘தன் இணையைப் பிரிந்த பெண் மான் மருண்டு நின்றது’

 • 4

  ஒன்றின் போக்கை ஒத்த மற்றொரு போக்கு.

  ‘இந்தச் சாலைக்கு இணையாக அமைந்திருக்கும் அந்தச் சாலையில் போக்குவரத்து அதிகம் இல்லை’

இணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இணை1இணை2இணை3இணை4

இணை4

பெயரடை

 • 1

  அரசு அலுவலகம், தனியார் நிறுவனம் முதலானவற்றில் உள்ள பதவிப் பெயர்களிலோ பொறுப்பைக் குறிப்பிடும் பெயர்களிலோ ‘துணை அல்லது சமம்’ என்னும் பொருளில் பயன்படுத்தப்படுவது.

  ‘இணை இயக்குநர்’
  ‘இணைப் பேராசிரியர்’
  ‘திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்’