தமிழ் இத்தனைக்கும் யின் அர்த்தம்
இத்தனைக்கும்
இடைச்சொல்
- 1
முதல் கூற்றை அதற்குப் பொருந்தாத இரண்டாவது கூற்றுடன் தொடர்புபடுத்த இரண்டு வாக்கியங்களுக்கு இடையில் பயன்படுத்தும் இடைச்சொல்.
‘எல்லாக் குறள்களையும் ஒப்பிக்கிறார்; இத்தனைக்கும் இவர் பள்ளிக்கூடமே போனதில்லை’‘எண்ணெய் வாங்காமல் வந்திருக்கிறீர்கள்; இத்தனைக்கும் நான் எழுதிக் கொடுத்திருக்கிறேன்’