தமிழ் இதழ் யின் அர்த்தம்

இதழ்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒற்றை வரிசையிலோ அடுக்காகவோ கொத்தாகவோ) பூக்களில் அமைந்திருக்கும் மெல்லிய ஏடு போன்ற பாகம்.

  ‘பூவின் இதழ்கள் உதிரத் தொடங்கின’

 • 2

  (முற்காலத்தில்) (எழுதுவதற்கான காய்ந்த) பனை ஓலை; ஏடு.

  ‘முப்பத்திரண்டு இதழ்கள் கொண்ட சுவடிக் கட்டு’

 • 3

  உயர் வழக்கு (புல்லின்) நீண்ட கூரிய இலை.

  ‘புல் இதழின் மீது பனித் துளி’

 • 4

  உயர் வழக்கு இமை.

  ‘பூவைக் கண் இதழில் ஒற்றிக்கொண்டாள்’

 • 5

  உயர் வழக்கு உதடு.

  ‘அவள் இதழ் விரியச் சிரித்தாள்’
  ‘‘ப’ என்பது ஈரிதழ் ஒலி’

தமிழ் இதழ் யின் அர்த்தம்

இதழ்

பெயர்ச்சொல்

 • 1

  (தின, வார, மாத) பத்திரிகை.

  ‘பாரதியார் ‘இந்தியா’ இதழின் ஆசிரியராக இருந்தார்’
  ‘தமிழில் எத்தனையோ வார, மாத இதழ்கள் வெளிவருகின்றன’

 • 2

  தினசரி, வார, மாதப் பத்திரிகையின் ஒரு தனிப் பிரதி.

  ‘இந்தப் பத்திரிகையின் சென்ற இதழில் என் சிறுகதை வெளியாயிற்று’

 • 3

  (பள்ளி, கல்லூரி முதலியவை ஆண்டுக்கு ஒருமுறை வெளியிடும்) மலர்.