தமிழ் இந்த யின் அர்த்தம்

இந்த

பெயரடை

 • 1

  (இடத்தைக் குறிக்கையில்) அருகில் அல்லது முன் இருக்கிற; (காலத்தைக் குறிக்கையில்) தற்போதைய.

  ‘இந்தப் பை யாருடையது?’
  ‘இந்தக் காலத்தில் திருமணம் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது’
  ‘இந்த நேரத்தில் தனியாக வரலாமா?’

 • 2

  இன்ன.

  ‘இந்த நேரத்தில், இந்த இடத்தில் இருப்பேன் என்று சொன்னால் நான் வந்து உன்னைப் பார்ப்பேன்’