தமிழ் இந்திரன் சந்திரன் யின் அர்த்தம்

இந்திரன் சந்திரன்

பெயர்ச்சொல்

  • 1

    தகுதிக்கு மீறி ஒருவர் மற்றொருவரைப் பாராட்டும்போது கூறப்படுவது.

    ‘நீ உன் முதலாளிக்கு என்ன செய்தாய்? உன்னைப் பற்றி இந்திரன் சந்திரன் என்று ஊர்முழுக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறாரே!’
    ‘அவரை நம்பாதே. நேரில் உன்னை இந்திரன் சந்திரன் என்பார். நீ போன பிறகு உன்னையே மட்டமாகப் பேசுவார்’