தமிழ் இன்னும் யின் அர்த்தம்

இன்னும்

வினையடை

 • 1

  இதுவரை.

  ‘நீ இன்னும் இங்குதான் இருக்கிறாயா?’
  ‘குழந்தைக்கு இன்னும் ஐந்து வயது ஆகவில்லை’

 • 2

  மேலும்; கூடுதலாக.

  ‘கடிதத்தில் இன்னும் எழுத வேண்டிய செய்திகள் ஏதாவது இருக்கிறதா?’
  ‘குடிக்க இன்னும் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்’

 • 3

  (முன்பு போலவே) இப்போதும்; (முடிவுக்கு வராமல்) தொடர்ந்து; இனியும்.

  ‘புகை பிடிப்பதை நிறுத்தப்போவதாக அவர் சொன்னார். ஆனால் இன்னும் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்’
  ‘இந்தப் பேட்டி இன்னும் வரும்’

 • 4

  (வாக்கியத்தின் முதலில், கால வரையறையைக் கூறும் சொல்லுக்கு முன் வரும்போது) இப்போதிலிருந்து.

  ‘இன்னும் ஒரு மாதத்துக்குள் வீட்டைக் கட்டி முடிக்க வேண்டும்’
  ‘இன்னும் சில நிமிடங்களில் அது நிகழப்போகிறது’