தமிழ் இன்பம் யின் அர்த்தம்

இன்பம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    புலன்களுக்கும் மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு; மகிழ்ச்சி.

    ‘பூத்துக் குலுங்கும் மலர்களைக் காண்பது கண்ணுக்கு இன்பம்’
    ‘குழந்தைகளின் பேச்சு பெற்றோர்களுக்கு எவ்வளவு இன்பம் தருகிறது!’