தமிழ் இனம்காட்டு யின் அர்த்தம்

இனம்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    (யார், எது, என்ன என்பதற்கான) அடையாளத்தை வெளிப்படுத்துதல்.

    ‘செல்களின் அமைப்பை ஆராய்வது சில நோய்களை இனம்காட்ட உதவும்’
    ‘ஒரு ராகத்தை இனம்காட்டும் ஸ்வரங்கள் எவை என்று தெரிந்துகொள்ள வேண்டும்’