தமிழ் இனம் யின் அர்த்தம்

இனம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரே வகையைச் சேர்ந்த பலவற்றை உள்ளடக்கிய பிரிவு.

  ‘மனித இனம்’
  ‘தாவர இனம்’

 • 2

  (பல உறுப்பினர்களை அல்லது உட்பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு வகையைக் குறிப்பிடுகையில்) (வகை) பிரிவு.

  ‘ஆண் இனம்’
  ‘குரங்கு இனங்கள்’

 • 3

  (மொழி, மதம் போன்ற ஏதேனும் ஒரு காரண அடிப்படையில் அமையும்) மக்கள் பிரிவு; குலம்.

  ‘ஆரிய இனம்’
  ‘இனக் கலவரம்’

 • 4

  தொகுப்பில் அல்லது பட்டியலில் உள்ள ஒன்று.

  ‘இந்த இனங்களுக்கு வரி விதிப்பு இல்லை’

 • 5

  காண்க: பேரினம்