இனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இனி1இனி2

இனி1

வினைச்சொல்இனிக்க, இனித்து

 • 1

  இனிப்புச் சுவையைக் கொண்டிருத்தல்.

  ‘கரும்பு இனிக்கும், வேப்பங்காய் கசக்கும்’

 • 2

  இனிய உணர்வும் மகிழ்ச்சியும் உண்டாதல்.

  ‘அந்த நினைவே அவளுக்கு இனிக்கிறது’

இனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

இனி1இனி2

இனி2

வினையடை

 • 1

  இதற்குப் பிறகு; இப்பொழுதிலிருந்து; இதற்கு மேல்; மேலும்.

  ‘அவருக்குக் கவிதை வெறி வந்துவிட்டது. இனி ஓய மாட்டார்’
  ‘இனி என் வாழ்க்கையை நான்தான் முடிவுசெய்வேன்’
  ‘என்னால் இனி இந்த வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாது’
  ‘இனியும் இந்தத் திட்டத்தைத் தள்ளிப் போடக் கூடாது’
  ‘மணி ஆறாகிவிட்டது; இனி பால்காரர் வரமாட்டார்’

 • 2

  எதிர்காலத்தில்.

  ‘இவரைப் போன்ற உத்தமரை நாம் இனி எங்கு காணப்போகிறோம்?’