தமிழ் இனிப்பு யின் அர்த்தம்

இனிப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  சர்க்கரை, கரும்பு முதலியவற்றைத் தின்னும்போது உணரப்படும் சுவை; தித்திப்பு.

  ‘பாயசத்துக்கு இனிப்பு போதுமா என்று பார்’

 • 2

  இனிப்புச் சுவையுடைய தின்பண்டம்.

  ‘விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது’

 • 3

  (‘பேசுதல்’ தொடர்பான வினைகளோடு வரும்போது) கேட்பதற்கு மட்டும் இனிமை.

  ‘அவர் இனிப்பாகப் பேசுவார். அவரை நம்ப முடியாது’
  ‘இனிப்பான பேச்சு’