தமிழ் இனிமை யின் அர்த்தம்

இனிமை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (புலன்) விரும்பக்கூடிய தன்மை; (புலனுக்கு) மகிழ்ச்சி தரும் தன்மை.

  ‘இனிமையாகப் பாடினார்’
  ‘இனிமையான காட்சி’

 • 2

  மகிழ்ச்சி; இன்பம்.

  ‘மண வாழ்க்கையின் இனிமை’
  ‘இனிமையான மாணவப் பருவம்’
  ‘இனிமையான நினைவு’

 • 3

  அன்பு வெளிப்படும் வகையில் அமைவது.

  ‘குழந்தைகளை அருகில் அழைத்து இனிமையாகப் பேசினார்’
  ‘எல்லோரையும் இனிமையாக வரவேற்றார்’