தமிழ் இம்சை யின் அர்த்தம்

இம்சை

பெயர்ச்சொல்

 • 1

  (உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்) வருத்தி உண்டாக்கும் வேதனை.

  ‘சிறுவர்கள் கீழே விழுந்துகிடந்த காக்கைக் குஞ்சை எந்த வித இம்சையும் செய்யாமல் மரத்தில் விட்டுவிட்டனர்’
  ‘தேர்வில் தோல்வி அடைந்ததை விடாமல் சுட்டிக்காட்டியது அவனுக்கு இம்சையாக இருந்தது’

 • 2

  (பிறருக்குக் கொடுக்கும்) தொல்லை.

  ‘நாளாக நாளாகக் குரங்குகளின் இம்சை பொறுக்க முடியவில்லை’