தமிழ் இம்மி யின் அர்த்தம்

இம்மி

பெயர்ச்சொல்

 • 1

  மிகச் சிறிய துகள்.

  ‘பசுந்தாள் உரப்பயிர்கள் மண் இம்மிகளுக்கு இடையில் காற்றோட்டத்தை உண்டாக்குகின்றன’
  ‘ஒரு தனிமத்தின் மிகச் சிறிய இம்மி அணு எனப்படும்’

 • 2

  மிகச் சிறிதளவு.

  ‘ஆற்றங்கரையில் இம்மி நிழல்கூடக் கிடையாது’
  ‘நீங்கள் சொன்னபடியே இம்மி பிசகாமல் செய்திருக்கிறேன்’