தமிழ் இயக்குநர் யின் அர்த்தம்

இயக்குநர்

பெயர்ச்சொல்

 • 1

  திரைப்படம், நாடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவற்றை இயக்குபவர்/திரைப்படம், நாடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவற்றில் நடனம், ஒளிப்பதிவு போன்றவற்றிற்கான பொறுப்பை ஏற்றிருப்பவர்.

  ‘இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒருவரே’
  ‘பிரபல திரைப்பட நடன இயக்குநர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகப் பங்கேற்றார்’

 • 2

  ஒரு நிறுவனத்தின் அல்லது ஓர் அரசுத் துறையின் உயர் நிர்வாகத் தலைவர்.

  ‘உயர் கல்வித் துறை இயக்குநர்’
  ‘தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்’