தமிழ் இயக்கு யின் அர்த்தம்

இயக்கு

வினைச்சொல்இயக்க, இயக்கி

 • 1

  (இயந்திரம், சாதனம் முதலியவற்றை) இயங்கச் செய்தல்; கையாளுதல்.

  ‘நவீன பீரங்கிகளை இயக்குவதற்கு ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது’
  ‘தொலைபேசி இணைப்புகளைப் பெண்கள் விரைவாக இயக்குகிறார்கள்’
  ‘கணிப்பொறியை இயக்கத் தெரிந்த இளைஞர்கள் வேலைக்குத் தேவை’

 • 2

  (போக்குவரத்தில் வாகனங்களைக் குறிப்பிட்ட இடங்களுக்கு இடையே) ஓடச் செய்தல்; பணியில் ஈடுபடுத்துதல்.

  ‘போக்குவரத்துக் கழகம் விழாக் காலங்களில் வழக்கத்திற்கு அதிகமான பேருந்துகளை இயக்குகிறது’

 • 3

  திரைப்படம், நாடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவை முழுவடிவம் பெறுவதற்கான பொறுப்பை ஒருவர் ஏற்றுக்கொள்ளுதல்.

  ‘இதுவரை தமிழ்ப் படங்களை இயக்கிவந்தவர் இப்போது ஒரு இந்திப் படத்தை இயக்குகிறார்’
  ‘நகைச்சுவையை மையமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியை இயக்குபவர் ஒரு நகைச்சுவை நடிகர் என்பது குறிப்பிடத் தக்கது’