தமிழ் இயங்கு யின் அர்த்தம்

இயங்கு

வினைச்சொல்இயங்க, இயங்கி

 • 1

  (இயற்கையில் அமைந்த அல்லது மனித முயற்சியால் வடிவமைக்கப்பட்ட முறைகள்) செயல்படுதல்.

  ‘பக்கவாத நோய் வந்ததால் ஒரு கையும் காலும் இயங்கும் சக்தியை இழந்துவிட்டன’
  ‘விசையைப் போட்டதும் நூற்பாலை இயந்திரங்கள் இயங்கத் தொடங்கின’
  ‘என் இருதயம் ஒரு கணம் நின்றுவிட்டு இயங்கியது!’

 • 2

  (அலுவலகம், ஓர் அமைப்பு போன்றவை) செயல்படுதல்.

  ‘அலுவலகம் வழக்கம் போல் இயங்கிக்கொண்டிருக்கிறது’
  ‘விமான விபத்தைப் பற்றித் தகவல் தெரிவிப்பதற்காக இந்தத் தகவல் அறை இருபத்துநான்கு மணி நேரமும் இயங்கும்’

 • 3

  (பயணிகளுக்காக வண்டி) குறிப்பிட்ட இடங்களுக்கு இடையே போய் வருதல்.

  ‘விசாகத்தை முன்னிட்டுத் திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே சிறப்புப் பேருந்துகள் இயங்கும்’