தமிழ் இயற்று யின் அர்த்தம்

இயற்று

வினைச்சொல்இயற்ற, இயற்றி

 • 1

  உயர் வழக்கு (பொதுவாக இலக்கியம்) படைத்தல்; (குறிப்பாகக் கவிதை, செய்யுள்) எழுதுதல்.

  ‘கம்பன் இயற்றிய காவியம்’
  ‘இது அவர் சிறுவயதில் இயற்றிய கவிதை’

 • 2

  (புதிய சட்டம், தீர்மானம் முதலியவற்றை) உருவாக்குதல்; ஏற்படுத்துதல்.

  ‘மக்களின் நலனுக்காகவே சட்டங்கள் இயற்றப்படுகின்றன’
  ‘கட்சியின் செயற்குழு இயற்றியிருக்கும் தீர்மானங்களைத் தொண்டர்களிடம் விளக்க வேண்டும்’

 • 3

  அருகிவரும் வழக்கு (தவம்) புரிதல்; (வழிபாடு) செய்தல்.

  ‘அகத்தியர் பொதிகை மலையில் தவம் இயற்றியதாகப் புராணம் கூறுகிறது’

 • 4

  அருகிவரும் வழக்கு (நற்செயலை) நிறைவேற்றுதல்.

  ‘அவர் பல சமூகத் தொண்டுகள் இயற்றிப் புகழடைந்தவர்’